2025 செப்டெம்பர் 17, புதன்கிழமை

சாதனை வீரர் க்ளோஸே ஓய்வு

A.P.Mathan   / 2014 ஓகஸ்ட் 12 , மு.ப. 03:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜேர்மனி கால்பந்தாட்ட அணியின் வீரர் மிரோஸ்லாப் க்ளோஸே, சர்வதேசப் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். உலக்கிண்ண தொடர்களில் கூடுதலான 16 கோல்களை அடித்தவர் என்ற சாதனையை இம்முறை உலகக்கிண்ண தொடரில் நிலை நாட்டியவர் இவர். ஜேர்மனி அணிக்காக கூடுதலான 71 கோல்களை அடித்தவர் இவரே. 
 
2001ஆம் ஆண்டு முதல் இம்முறை உலகக்கிண்ண தொடர் வரை 137 போட்டிகளில் விளையாடியுள்ளார் க்ளோஸே. கடந்த 4 உலக்கக்கிண்ண போட்டி தொடர்களிலும் விளையாடியுள்ள இவர், 2002ஆம் ஆண்டு தனது முதல் உலகக் கிண்ண தொடரில் 5 கோல்களை அடித்து கூடுதலான கோல்களை அடித்த வீரருக்கான தங்கக் காலணி விருதை வெற்றி பெற்றவர் ஆவார். 
 
உலக்கக்கிண்ணம் வென்ற ஜேர்மனி அணியில் இருந்து ஓய்வு பெற்றுள்ள இரண்டாவது வீரர் மிரோஸ்லாப் க்ளோஸே. ஏற்கனவே அணித்தலைவர் ப்லிப் லாம் சர்வதேசப் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்று இருந்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X