2025 செப்டெம்பர் 17, புதன்கிழமை

மன்செஸ்டர் அணியின் தலைவராக ரூனி நியமனம்

A.P.Mathan   / 2014 ஓகஸ்ட் 13 , பி.ப. 02:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து பிரபல கால்பந்தாட்ட கழகமான மன்செஸ்டர் யுனைட்டட் அணியின் தலைவராக உலகின் பிரபல வீரர்களில் ஒருவரானா வெய்ன் ரூனி தெரிவு செய்யப்பட்டுள்ளார். புதிய பயிற்றுவிப்பாளரான லூயிஸ் வன் கால், ரூனியை தலைவராக நியமித்துள்ளார். இங்கிலாந்தை சேர்ந்த ரூனி அல்லது நெதர்லாந்தை சேர்ந்த வன் பேர்சி ஆகியோரில் ஒருவருக்கே தலைவர் பதவி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 
 
தனக்கும், தனது குடும்பத்துக்கும் கிடைத்த மிகப்பெரிய கௌரவம் என குறிப்பிட்டுள்ள ரூனி, மிகப் பெரிய முன்னணிக் கழகம் ஒன்றிற்கு தலைமை தாங்குவது தனக்கு கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பு என கூறியுள்ளார். தங்கள் அணியில் ஒற்றுமை இருப்பதாகவும் இதன் காரணமாக சிறப்பாக விளையாடி வெற்றிகளைப் பெறமுடியும் எனவும் ரூனி நம்பிக்கை வெளியிட்டுள்ளார். 
 
கூடுதலான தடவைகள் இங்கிலாந்து பிரீமியர் லீக் போட்டிகளில் வெற்றி பெற்று இருந்த  மன்செஸ்டர் யுனைட்டட் அணி கடந்த வருடம் ஒன்பதாவது இடத்தைப் பிடித்து இருந்தது. மன்செஸ்டர் யுனைட்டட் அணியின் தலைவர் நியாமியா விடிச், இன்டெர்மிலான் கழகத்திற்கு மாறியுள்ளமையினால் வெய்ன் ரூனி அணித் தலைவராக நியமிக்கப்பட்டுளார். எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை இங்கிலாந்து பிரீமியர் லீக் தொடரின் இந்த வருட போட்டிகள் ஆரம்பிக்கின்றன.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X