2025 செப்டெம்பர் 17, புதன்கிழமை

மீண்டும் தடுமாறும் இந்திய அணி

A.P.Mathan   / 2014 ஓகஸ்ட் 16 , மு.ப. 07:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து, இந்தியா அணிகளுக்கிடையிலான ஐந்தாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டி நேற்று ஆரம்பமாகி இருந்தது. முதல் நாள் முடிவில் இந்தியா அணி மிக மோசமாக தடுமாறியுள்ளது. 
 
துடுப்பாட்டத்தில் 152 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது. அணித்தலைவர் டோனி தனித்து நின்று போராடி 82 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார். முரளி விஜய் 18 ஓட்டங்கள். அஷ்வின் 13 ஓட்டங்கள். பந்துவீச்சில் க்றிஸ் ஜோர்டான், க்றிஸ் வோக்ஸ் ஆகியோர் தலா 3 விக்கெட்களையும், ஜேம்ஸ் அன்டேர்சன், ஸ்டுவோர்ட் ப்ரோட் ஆகியோர் தலா 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். 
 
பதிலுக்கு துடுப்பாடி வரும் இங்கிலாந்து அணி விக்கெட் இழப்புகள் இன்றி 62 ஓட்டங்களைப் பெற்றுள்ளது. சாம் ரொப்சன் 33 ஓட்டங்களையும், அலஸ்டியர் குக் 24 ஓட்டங்களையும் பெற்றுள்ளனர். 
 
இங்கிலாந்து த ஓவல் மைதானத்தில் நடைபெறும் இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி இந்தியா அணியை முதலில் துடுப்பாடுமாறு கேட்டுக் கொண்டது. 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X