2025 செப்டெம்பர் 17, புதன்கிழமை

பாகிஸ்தான் கிரிக்கெட் சபை தலைவர் உறுதி செய்யப்பட்டுள்ளார்

A.P.Mathan   / 2014 ஓகஸ்ட் 17 , மு.ப. 01:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் முன்னாள் தலைவரான ஷகரியர் கான், மீண்டும் தலைமைப் பொறுப்புகளை ஏற்கும் வாய்ப்புகள் உருவாகியுள்ளன. தலைமைப் பதவிக்கான விண்ணப்ப திகதி 15ஆம் திகதியுடன் நிறைவைடைந்துள்ள நிலையில், வேறு யாரும் குறித்த பதவிக்கான தேர்தலுக்கு விண்ணப்பிக்கவில்லை. 
 
தேர்தல், நாளை திங்கட்கிழமை நடைபெறவிருந்த நிலையில் வேறு யாரும் விண்ணப்பிக்காமையினால் ஷகரியர் கான் நேரடியாக குறித்த பதவிக்கு நியமிக்கப்படவுள்ளார். 
 
கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் தலைவர் பதவி தொடர்ச்சியான மாற்றங்களுக்கு உட்பட்டு இருந்தது. நீதிமன்ற மாற்றங்கள், அரசாங்க மாற்றங்கள் என்ற இழுபறிக்கு பின்னர் தற்போது இறுதி முடிவு கிடைக்கப்பெற்றுள்ளது. 
 
தலைமைப் பொறுப்பு மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் சபை தொடர்பான யாப்பு மாற்றங்களும் செய்யப்பட்டுள்ள நிலையில் இனி வரும் காலங்களில் குறித்த தலைமை பிரச்சினைக்கு முடிவு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X