.jpg)
இலங்கை, பாகிஸ்தான் அணிகளுக்கிடையில் நடைபெற்றுவரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி வெற்றியை அண்மித்துள்ளது. நான்காம் நாள் நிறைவில் 271 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் துடுப்பாடி வரும் பாகிஸ்தான் அணி 7 விக்கெட்களை இழந்து 127 ஓட்டங்களைப் பெற்றுள்ளது. இதில் ஆஷாட் சபிக் 32 ஓட்டங்களைப் பெற்றார். சப்ராஸ் அஹமட் 38 ஓட்டங்களைப் பெற்றுள்ளார். பந்துவீச்சில் ரங்கன ஹேரத் 4 விக்கெட்களையும், தம்மிக்க பிரசாத் 2 விக்கெட்களையும் கைப்பற்றியுள்ளனர்.
இலங்கை அணி இரண்டாவது இன்னிங்சில் 282 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது. இதில் குமார் சங்ககார 59 ஓட்டங்களையும், மஹேல ஜெயவர்தன 54 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் சைட் அஜ்மால், வஹாப் ரியாஸ் ஆகியோர் தலா 3 விக்கெட்களையும், அப்துர் ரெஹ்மான் 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். பாகிஸ்தான் அணி தமது முதல் இன்னிங்சில் 332 ஓட்டங்களைப் பெற்று சகல விக்கெட்களையும் இழந்தது. சப்ராஸ் அஹமட் தனது கன்னிச்சத்தத்தைப் பெற்றுக் கொண்டார். 103 ஓட்டங்களை அவர் பெற்றுக் கொண்டார். அஹமட் செஷாட் 58 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார். ரங்கன ஹேரத் பந்துவீச்சில் 9 விக்கெட்களைக் கைப்பற்றிக் கொண்டார்.
முன்னதாக இலங்கை அணி தமது முதலாவது இன்னிங்சில் சகல விக்கெட்களையும் இழந்து 320 ஓட்டங்களைப் பெற்றது. இதில் உப்புல் தரங்க 92 ஓட்டங்களையும், கௌஷால் சில்வா 41 ஓட்டங்களையும், அஞ்சலோ மத்தியூஸ் 39 ஓட்டங்களையும் பெற்றுள்ளனர். பந்துவீச்சில் ஜுனைட் கான் 5 விக்கெட்களையும், வஹாப் ரியாஸ் 3 விக்கெட்களையும் கைப்பற்றினர்.