2025 செப்டெம்பர் 17, புதன்கிழமை

இந்திய அணிக்கு மீண்டும் ஒரு மோசமான தோல்வி

A.P.Mathan   / 2014 ஓகஸ்ட் 17 , பி.ப. 07:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கிடையில் நடைபெற்ற ஐந்தாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியில் இந்திய அணி மீண்டும் ஒரு மோசமான தோல்வியை சந்த்தித்துள்ளது. இந்தப் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 152 ஓட்டங்களையும், இரண்டாம் இன்னிங்சில் 94 ஓட்டங்களையும் மாத்திரமே பெற்றது. இரண்டாம் இன்னிங்சில் ஸ்டுவோ பின்னி 25 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் பெற்றுக் கொண்டார். இங்கிலாந்து அணியின் பந்துவீச்சில் க்றிஸ் ஜோர்டான் 4 விக்கெட்களையும், ஜேம்ஸ் அன்டர்சன் 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். 
 
இங்கிலாந்து அணி, முதல் இன்னிங்சில் சகல விக்கெட்களையும் இழந்து 486 ஓட்டங்களைப் பெற்றது. இதில் ஜோ ரூட் ஆட்டமிழக்காமல் 149 ஓட்டங்களையும், அலிஸ்டயர் குக் 79 ஓட்டங்களையும், கரி பலன்ஸ் 64 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் இஷாந்த் ஷர்மா 4 விக்கெட்களையும், அஷ்வின் 3 விக்கெட்களையும் கைப்பற்றினர். இந்தியா அணி முதல் இன்னிங்சில்    152 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது. அணித்தலைவர் டோனி தனித்து நின்று போராடி 82 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார். முரளி விஜய் 18 ஓட்டங்கள். அஷ்வின் 13 ஓட்டங்கள். பந்துவீச்சில் க்றிஸ் ஜோர்டான், க்றிஸ் வோக்ஸ் ஆகியோர் தலா 3 விக்கெட்களையும், ஜேம்ஸ் அன்டேர்சன், ஸ்டுவோர்ட் ப்ரோட் ஆகியோர் தலா 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். 
 
இந்த வெற்றியின் மூலம் ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் 3 இற்கு 1 என்ற கணக்கில் இங்கிலாந்து தொடரைக் கைப்பற்றியுள்ளது. போட்டியின் நாயகர்களாக இங்கிலாந்து அணி சார்பாக ஜேம்ஸ் அன்டேர்சனும், இந்தியா அணி சார்பாக புவனேஸ்வர் குமாரும் தெரிவு செய்யப்பட்டனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X