2025 செப்டெம்பர் 17, புதன்கிழமை

எபோலா தாக்கம்: யூத் ஒலிம்பிக் போட்டியிலிருந்து விலகியது நைஜீரியா

Kogilavani   / 2014 ஓகஸ்ட் 18 , மு.ப. 06:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

நைஜீரியா எபோலா நோய் அச்சுறுத்தல் காரணமாக யூத் ஒலிம்பிக் போட்டியில் இருந்து நைஜீரியா விலகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஆட்கொல்லி நோயான எபோலா ஆப்பிரிக்க நாடுகளில் வேகமாகப் பரவி வருகிறது. இந்நோய்க்கு இதுவரை ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர். பத்து இலட்சத்துக்கும்  அதிகமானோர் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக கடந்த வாரம் உலக சுகாதார நிறுவனம் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது.

மேலும், எபோலோ நோய்க்கு எதிராக சர்வதேச சுகாதார நிறுவனம் அவசர நிலையைப் பிரகடனப் படுத்தியுள்ளது. எனவே, மற்ற நாடுகளிலும் நோய் தடுப்பு நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

இதன்தொடர்ச்சியாக எபோலா நோய் பரவியுள்ள சியரா லியோன், லைபீரியா ஆகிய நாடுகள் சீனாவில் நடைபெற உள்ள யூத் ஒலிம்பிக் போட்டியில் இருந்து விலகின. அந்த வரிசையில் தற்போது நைஜீரியாவும் இணைந்துள்ளது.

யூத் ஒலிம்பிக் போட்டியில் இருந்து நைஜீரியா விலகியதை சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தலைவர் தோமஸ் பாக் உறுதி செய்துள்ளார்.

இது தொடர்பாக தோமஸ் பாக் மேலும் கூறுகையில்,

'எபோலா நோய் தாக்கியுள்ள இந்த கடினமான சூழ்நிலையில் ஒலிம்பிக் போட்டியில் இருந்து சியரா லியோன் மற்றும் லைபீரியா நாடுகள் விலகியதை மதிக்கிறோம்.  இதேபோல் நைஜீரியாவும் விலக முடிவு செய்துள்ளதாக தகவல் அனுப்பியிருக்கிறது.  இது வீரர்களுக்கு மிகவும் கடினமானது என்பதை நினைக்கும்போது கவலையாக உள்ளது' எனத் தெரிவித்துள்ளார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X