2025 செப்டெம்பர் 17, புதன்கிழமை

அமெரிக்கா டென்னிஸ் போட்டிகளில் ரபேல் நடால் விளையாடமாட்டார்

A.P.Mathan   / 2014 ஓகஸ்ட் 19 , மு.ப. 07:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

டென்னிஸ் போட்டிகளின் நட்சத்திர வீரர்களில் ஒருவரான ஸ்பெயின் நாட்டின் ரபேல் நடால், அமெரிக்கா பகிரங்க டென்னிஸ் போட்டிகளில் விளையாட மாட்டார் என அறிவித்துள்ளார். அவர் இறுதியாக விளையாடிய 3 அமெரிக்கா பகிரங்க டென்னிஸ் போட்டிகளிலும் இறுதிப் போட்டிக்குத் தெரிவான அதேவேளை இரண்டு தடவைகள் வெற்றி பெற்றுள்ளார். 
 
கடந்த மாதம் விம்பிள்டன் தொடரில் ஆரம்ப சுற்றுக்களிலேயே 19 வயது அவுஸ்திரலியா வீரரிடம் தோல்வியடைந்து நடேல் வெளியேற்றப்பட்டார். உபாதையே இதற்க்கு காரணமாகும். நான் இம்முறை அமெரிக்கா பகிரங்க டென்னிஸ் போட்டிகளில் பங்குபற்ற மாட்டேன் என அறிவிப்பது கஷ்டமாக இருந்தாலும் அதை நீங்கள் உணர்ந்து கொள்வீர்கள் என நம்புகின்றேன் என நடால் தெரிவித்துள்ளார். 
 
உலகின் இரண்டாம் நிலை வீரராக கருதப்படும் நடால் அண்மையில் நடைபெற்ற இரண்டு தொடர்களில் பங்குபற்றவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X