2025 செப்டெம்பர் 17, புதன்கிழமை

இலங்கை ஒருநாள் அணி

A.P.Mathan   / 2014 ஓகஸ்ட் 19 , பி.ப. 06:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை, பாகிஸ்தான் அணிகளுக்கிடையில் நடைபெறவுள்ள 3 போட்டிகள் அடங்கிய ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் விளையாடவுள்ள இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. மூன்று வருடங்களின் பின்னர் சுராஜ் ரந்தீவ் அணியில் இணைக்கப்பட்டுள்ளார். சீகுகே பிரசன்னவுக்கும் அணியில் இடம் வழங்கப்பட்டுள்ளது. 
 
சர்வதேசக் கிரிக்கெட் சபையினால் பந்து வீச தடைசெய்யப்பட்டுள்ள சசித்திர சேனநாயக்க, அஜந்த மென்டிஸ் ஆகியோருக்காகவே இவர்கள் இருவரும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். இலங்கை A அணிக்காக இங்கிலாந்தில் சிறப்பாக விளையாடிய தினேஷ் சந்திமால் மீண்டும் அணியில் இடம் பிடித்துள்ளார். ஆரம்ப துடுப்பாட்ட வீரர் உப்புல் தரங்கவும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். 
 
தென் ஆபிரிக்கா தொடரில் மன அழுத்தம் காரணமாக அணியில் இருந்து விலகிய திசர பெரேராவிற்கும் இந்த அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. தம்மிக்க பிரசாத்தும் இந்த அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். ஆரம்ப துடுப்பாட்ட வீரர் குஷால் பெரேரா, கித்ருவான் விதானகே ஆகியோர் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ள அதேவேளை, உபாதை குணமடையாத சுரங்க லக்மால் அணியில் இணைக்கப்படவில்லை. 
 
அணி விபரம் 
அஞ்சலோ மத்தியூஸ், திலகரட்ன டில்ஷான், உப்புல் தரங்க, குமார் சங்ககார, மஹேல ஜெயவர்தன, டினேஷ் சந்திமால், அஷான் பிரியரஞ்சன், லஹிறு திரிமன்னே, லசித் மாலிங்க, நுவான் குலசேகர, தம்மிக்க பிரசாத், ரங்கன ஹேரத், சீகுகே பிரசன்னா, சுராஜ் ரந்தீவ், திசர பெரேரா

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X