2025 செப்டெம்பர் 17, புதன்கிழமை

இந்திய பயிற்றுவிப்பாளர் ஓரங்கட்டப்படவில்லை: ரவி சாஸ்திரி

A.P.Mathan   / 2014 ஓகஸ்ட் 20 , பி.ப. 08:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியா அணிக்கு பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள ரவி சாஸ்திரி, தனது பொறுப்பு எல்லாவற்றிக்கும் மேலாண்மையாக செயற்படுவது மாத்திரமே என தெரிவித்துள்ளார். அணியின் பயிற்றுவிப்பாளர் டங்கன் பிலட்ச்சர் ஓரம் கட்டப்படவில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார். அனைவரும் தங்கள் நடவடிக்கைகள் தொடர்பாக எனக்கு அறிவிக்க வேண்டும் இதுதான் தற்போது எனக்கு வழங்கப்பட்டுள்ள பதவி என அவர் ரவி சாஸ்திரி கூறியுள்ளார். 
 
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை, ரவி சாஸ்திரியின் பதவி அறிவித்தல் வழங்கப்பட்ட உடன் ரவி சாஸ்திரி, இந்திய அணியின் தலைவர் டோனி, பயிற்றுவிப்பாளர் டங்கன் பிலட்ச்சர் ஆகியோரை சந்தித்து 2 மணி நேரம் கலந்துரையாடி, அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பாகவும் ஒருநாள் சர்வதேசப் போட்டிகளுக்கு அணியை தயார்படுத்தும் யுத்திகள் குறித்தும் கலந்துரையாடியுள்ளார். 
 
உடனடியாக அணியில் எவ்வாறான மாற்றங்களை செய்ய வேண்டும். தொடர்பாடல்களை எவ்வாறு சரியாக மேற்கொள்ள வேண்டும் போன்ற விடயங்களை கலந்துரையாடியதாக ரவி சாஸ்திரி கூறியுள்ளார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X