.jpg)
மேற்கிந்திய தீவுகள், பங்களாதேஷ் அணிகளுக்கிடையில் நடைபெற்ற முதலவாது ஒருநாள் சர்வதேசப் போட்டியில் கெரோன் பொலார்டின் சிறந்த மீள் வருகை மூலம் மேற்கிந்திய தீவுகள் அணி தோல்வியில் இருந்து தப்பி 3 விக்கெட்களினால் வெற்றி பெற்றது.
இந்தப் போட்டியில் முதலில் துடுப்பாடிய பங்களாதேஷ் அணி 50 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 217 ஓட்டங்களைப் பெற்றது. இதில் அனாமல் ஹக் 109 ஓட்டங்களையும், தமிம் இக்பால், நசீர் ஹொசைன் ஆகியோர் தலா 26 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் டுவைன் பிராவோ 4 விக்கெட்களைக் கைப்பற்றினார்.
பதிலுக்கு துடுப்பாடிய மேற்கிந்திய தீவுகள் அணி ஆரம்ப விக்கெட்களை வேகமாக இழந்து தோல்விப் பாதையில் சென்ற வேளையில் தினேஷ் ராம்டின், கெரோன் பொலார்ட் ஆகியோர் இணைந்து 145 ஓட்டங்களை ஆறாவது விக்கெட் இணைப்பாட்டமாக பெற்றனர். கெரோன் பொலார்ட் 89 ஓட்டங்களையும், தினேஷ் ராம்டின் 74 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் அல் அமீன் ஹொசைன் 4 விக்கெட்களைக் கைப்பற்றினார்.
போட்டியின் நாயகனாக கெரோன் பொலார்ட் தெரிவு செய்யப்பட்டார். இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் அடங்கிய தொடரில் மேற்கிந்திய தீவுகள் அணி 1 இற்கு 0 என முன்னிலை பெற்றுள்ளது.