2026 ஏப்ரல் 08, புதன்கிழமை

அல் ஹசனின் தண்டனை குறைப்பு

Thipaan   / 2014 ஓகஸ்ட் 27 , பி.ப. 02:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆறு மாதங்களுக்கு தடை செய்யப்பட்டு இருந்த பங்களாதேஷ் அணி வீரர் சகிப் அல் ஹசனின் தண்டனை மூன்றரை மாதமாக குறைக்கப்பட்டுள்ளது.

இதன் படி செப்டம்பர் மாதம் 15ஆம் திகதி முதல்  அணி தெரிவுக்கு தகுதி உடையவர் ஆகின்றார்.

இதன் மூலம் பங்களாதேஷில் நடைபெறவுள்ள சிம்பாவே அணியுடனான தொடரில் இவர் போட்டிகளில் பங்கு பற்ற முடியும்.
ஆனாலும் வெளிநாட்டு அமைப்புகளின் தொடர்களில் பங்குபற்றுவதற்கான தடை நீக்கப்படவில்லை.

சகிப் அல் ஹசன் ஒழுக்கமின்மையாக நடந்து கொள்கின்றார் என குற்றம் சாட்டப்பட்டு 6 மாதங்களுக்கு கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவதற்கு பங்களாதேஷ் கிரிக்கெட் சபை  தடை செய்தது.

அத்துடன் 2015ஆம் ஆண்டு நிறைவு வரை வெளிநாட்டு அமைப்புகளின் தொடர்களில் பங்குபற்றுவதற்கான அனுமதியையும் பங்களாதேஷ் கிரிக்கெட் சபை இரத்து செய்து  இருந்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0

  • naflan Tuesday, 02 September 2014 12:56 PM

    அவரை மன்னிக்கவும்

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .