A.P.Mathan / 2014 ஓகஸ்ட் 27 , பி.ப. 05:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
தென் ஆபிரிக்கா, அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையில் நடைபெற்ற முக்கோண ஒருநாள்ப் போட்டித் தொடரின் இரண்டாவது போட்டியில் தென் ஆபிரிக்கா அணி 328 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை இலகுவாக 3 விக்கெட்களை இழந்து 46.4 ஓவர்களில் பெற்று வெற்றி பெற்றது. இதில் AB DE வில்லியர்ஸ் ஆட்டமிழக்காமல் 136 ஓட்டங்களையும், பப் டு பிலேசிஸ் 106 ஓட்டங்களையும் பெற்றனர். இவர்களது மூன்றாவது விக்கெட் இணைப்பாட்டம் 206 ஓட்டங்களை வழங்கியது. பப் டு பிலேசிஸ்ஸின் கன்னிச்சதம் இதுவாகும். டுமினி ஆட்டமிழக்காமல் 36 ஓட்டங்களையும் பெற்றார். மிச்சல் ஸ்டார்க் 2 விக்கெட்களைக் கைப்பற்றினார். அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .