2026 ஏப்ரல் 08, புதன்கிழமை

டோனிக்கு சார்பாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை செயலாளர் ஆதரவு

A.P.Mathan   / 2014 ஓகஸ்ட் 29 , மு.ப. 02:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்திய அணித் தலைவர் டோனி, உலகக்கிண்ணம் வரை டங்கன் பிலட்ஷர் பயிற்றுவிப்பாளராக இருப்பார் என தெரிவித்தமை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் உயர் பதவிகளில் உள்ள சிலரால் சரச்சையாக மாற்றப்பட்டது. சபையின் செயற்குழு கூட்டத்தில் இது தொடர்பாக பேச வேண்டும். குறித்த கருத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டது. பயிற்றுவிப்பாளர் தொடர்பாக முடிவெடுக்கும் அதிகாரம் டோனிக்கு இல்லை எனவும் மேலும் தெரிவிக்கப்பட்டது.   
 
இந்த நிலையில் டோனி கூறியது அவருடைய கருத்துகள் எனவும், ஒப்பந்தப்படி டங்கன் பிலட்ஷர் அடுத்த உலகக்கிண்ணம் வரை கடமையாற்ற முடியும். அதன் அடிப்படையிலேயே டோனி தனது கருத்துகளை வெளியிட்டுள்ளார். எனவே இதை ஒரு பிரச்சினையாக எடுத்துக்கொள்ள தேவையில்லை. அத்துடன் இந்த விடயம் தொடர்பாக செயற்குழு கூட்டத்தில் பேச வேண்டிய அவசியம் இல்லை எனவும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை செயலாளர் சஞ்சய் பட்டேல் தெரிவித்துள்ளார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .