A.P.Mathan / 2014 ஓகஸ்ட் 29 , மு.ப. 03:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஐரோப்பிய கால்பந்தாட்ட வீரராக போர்த்துக்கல் அணித்தலைவரும், ரியல் மாட்ரிட் கழக வீரருமான கிறிஸ்டியானோ ரொனால்டோ தெரிவு செய்யப்பட்டுள்ளார். ஐரோப்பாவின் சிறந்த கால்பந்தாட்ட வீரருக்கான போட்டியில் நெதர்லாந்து வீரர் ஆர்ஜன் ரொபன், ஜேர்மனி வீரர் மனுஎல் நெயுர் ஆகியோருடன் போட்டியிட்டு ரொனால்டோ இந்த விருதை தனதாக்கியுள்ளார். இந்த விருதை பெறும் நான்காவது வீரர் இவர். இதற்கு முன்னர் பிரான்ஸ் நாட்டின் பிரான்க் ரிபேரி, ஸ்பெயின் வீரர் அன்றேஸ் இனியஸ்டா, ஆர்ஜன்டீன வீரர் லியனொல் மெஸ்ஸி ஆகியோர் வென்றுள்ளனர். மெஸ்ஸி அவரின் பார்சில்னோ கழகத்திற்காக விருதைப் பெற்றுக் கொண்டார். அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .