2026 ஏப்ரல் 08, புதன்கிழமை

ஜேர்மனியை பழி தீர்த்து ஆர்ஜன்டீனா

A.P.Mathan   / 2014 செப்டெம்பர் 06 , பி.ப. 06:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலகக்கிண்ண கால்பந்தாட்ட தொடரின் இறுதிப் போட்டியில் விளையாடிய ஆர்ஜன்டீனா, ஜேர்மனி அணிகள் உலகக்கிண்ண இறுதிப் போட்டிக்கு பிறகு விளையாடிய முதல் சர்வதேசப் போட்டியில் தமுக்குள் மீண்டும் மோதின. இறுதிப் போட்டியில் தோல்வியடைந்த ஆர்ஜன்டீனா அணி, ஜேர்மனி அணியை இந்தப் போட்டியில் 4 இற்கு 2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றுள்ளது. 
 
உலக சம்பியன் அணி தாம் உலகக்கிண்ண இறுதிப் போட்டியில் வென்றதன் பின் விளையாடிய முதற்ப் போட்டியில் தோல்வியடைந்துள்ளது. இந்த வெற்றியின் மூலம் ஆர்ஜன்டீனா அணி தாம் உலக்கிண்ண இறுதிப் போட்டியில் அடைந்த தோல்விக்கு பழி தீர்த்துள்ளது. அதேவேளை இந்த வெற்றியின் மூலம் ஆர்ஜன்டீனா அணி தரப்படுத்தல்களில் முதலிடத்தைப் பெறும் வாய்ப்புகளும் உருவாகியுள்ளன. ஜேர்மனி அணி தரப்படுதலில் முதலிடத்தில் உள்ளமை குறிபிடத்தக்கது. 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .