2026 ஏப்ரல் 08, புதன்கிழமை

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் தலைவராக மீண்டும் ஸ்ரீநிவாசன்?

A.P.Mathan   / 2014 செப்டெம்பர் 08 , பி.ப. 01:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் தடைசெய்யப்பட்ட தலைவர் ஸ்ரீனிவாசனுக்கு தமது ஆதரவினை வழங்குவது என சபையின் 21 உறுப்பினர்கள் ஏகமனதாக முடிவு செய்துள்ளனர். சென்னையில் நடைபெற்ற கூட்டம் ஒன்றிலேயே இந்த முடிவு எடுக்கபப்ட்டுள்ளது. இந்த மாதம் 30ஆம் திகதிக்கு முன்னர் வருடாந்தப் பொதுக் கூட்டம் நடாத்தப்படவேண்டும். அத்துடன் புதிய நிர்வாக சபை தெரிவு செய்யப்பட வேண்டும். நீதிமன்றினால் தற்காலிக  தடை செய்யப்பட்டுள்ள  ஸ்ரீனிவாசனின் தடை நீக்கப்பட்ட பின்னரே வருடாந்தப் பொதுக் கூட்டம் நடாத்தப்படும் என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு  சபையின் செயலாளர் சஞ்சய் பட்டேல் தெரிவித்துள்ளார். 
 
அத்துடன் இந்தக் கூட்டத்திற்கு பதிலாக 26ஆம் திகதி செயற்குழு கூட்டத்தை நடாத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது. 
 
இதேவேளை அடுத்த தலைவர் பதவிக்கு அவரை பரிந்துரைப்பது எனவும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அவ்வாறு அவர் மீண்டும் பரிந்துரைக்கப்பட்டால் அவர் போட்டியின்றி தெரிவு செய்யப்பட அதிகமான வாய்ப்புகள் உள்ளதாகவும் நம்பப்படுகின்றது. ஆனாலும் இந்த முடிவுகளுக்கு எதிராக வழக்கு தொடர வாய்ப்புக்களும் உள்ளன. 
 
ஏற்கனவே ஸ்ரீனிவாசனுக்கு எதிராக பீகார் கிரிக்கெட் சம்மேளனம் பதிவு செய்த வழக்கின் மூலமே ஸ்ரீநிவாசன் தலைவர் பதவியில் இருந்து தடைசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. குறித்த திகதியில் வருடாந்த பொதுக் கூட்டம நடைபெறாவிட்டால் தான் நீதிமன்றில் முறையிட்டு  கூட்டத்தை நடாத்தி தலைவர் பதவிக்கான தேர்தலை நியாயமாக நடாத்த நடவடிக்கை எடுப்பேன் என பீகார் கிரிக்கெட் சம்மேளன செயலாளர் ஆதித்திய வர்மா தெரிவித்துள்ளார். இவரே ஸ்ரீனிவாசனுக்கு எதிரான ஐ.பி.எல் சூதாட்ட வழக்கை பதிவு செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .