2026 ஏப்ரல் 08, புதன்கிழமை

சம்பியன் லீக்: நோர்தன் நைட்ஸ், மும்பை இந்தியன் அணிகள் வெற்றி

A.P.Mathan   / 2014 செப்டெம்பர் 15 , மு.ப. 07:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

சம்பியன் லீக் தொடரின் தெரிவுப் போட்டிகளின் இரண்டாம் நாளில் நோர்தன் நைட்ஸ், மும்பை இந்தியன் அணிகள் வெற்றி பெற்றுள்ளன. 
 
நோர்தன் நைட்ஸ் மற்றும் லாகூர் லயன்ஸ் அணிகளுக்கிடையில் நடைபெற போட்டியில் நோர்தன் நைட்ஸ் அணி இலகுவான 72 ஓட்டங்களிலான வெற்றியைப் பெற்றுக் கொண்டது. இந்தப்  போட்டியில் முதலில் துடுப்பாடிய நோர்தன் நைட்ஸ் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 170 ஓட்டங்களைப் பெற்றது. இதில் டேனியல் பிலைன், வோட்லிங் ஆகியோர் தலா 53 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டனர். பந்துவீச்சில் ஐசாஸ் சீமா 3 விக்கெட்களைக் கைப்பற்றிக்கொண்டார். பதிலுக்கு துடுப்பாடிய லாகூர் லயன்ஸ் அணி 18 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 98 ஓட்டங்களைப் பெற்றது. இதில் சாட் நசீம் 58 ஓட்டங்களைப் பெற்றார். ரிம் சௌதி 3 விக்கெட்களையும், ட்ரென்ட் போல்ட், ஐஸ் சோதி ஆகியோர் தலா 2 விக்கெட்களைக் கைப்பற்றினர். 
 
மும்பை இந்தியன்ஸ், சதேர்ன் எக்ஸ்பிரஸ் அணிகளுக்கிடையில் நடைபெற்ற போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 9 விக்கெட்களினால் இலகுவான வெற்றியைப் பெற்றுக் கொண்டது. இந்தப் போட்டியில் முதலில் துடுப்பாடிய சதேர்ன் எக்ஸ்பிரஸ் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 161 ஓட்டங்களைப் பெற்றது. பர்வீஸ் மஹ்ரூப் ஆட்டமிழக்காமல் 41 ஓட்டங்களையும், தனுஸ்க குணதிலக 30 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர். பதிலுக்கு துடுப்பாடிய மும்பை இந்தியன்ஸ் அணி 16.2 ஓவர்களில் 1 விக்கெட்டை இழந்து 166 ஓட்டங்களைப் பெற்றது. இதில் லென்டி சிமொன்ஸ் ஆட்டமிழக்காமல் 76 ஓட்டங்களையும், மைக்கல் ஹசி 60 ஓட்டங்களையும் பெற்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .