2026 ஏப்ரல் 08, புதன்கிழமை

இலங்கை கிரிக்கெட் பயிற்றுவிப்பாளர் இந்த மாத இறுதிக்குள் அறிவிக்கப்படுவார்

A.P.Mathan   / 2014 செப்டெம்பர் 16 , மு.ப. 07:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை கிரிக்கெட் அணியின் நிரந்தர பயிற்றுவிப்பாளர், இந்த மாத இறுதிக்குள் அறிவிக்கப்படுவார் என இலங்கை கிரிக்கெட் அமைப்பின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஆஷ்லி டி சில்வா தெரிவித்துள்ளார். குறித்த பதவிக்கு 15 பேர் விண்ணப்பித்த இருந்தனர். இவர்களில் இருந்து 9 பேர் இப்போது இறுதிப் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். இவர்களில் மார்வன் அத்தப்பத்து மாத்திரமே இலங்கையை சேர்ந்தவர். 
 
விண்ணப்பதாரிகளுடன் ஸ்கைப் மூலம் பேசியதாகவும், அதன் பின்னரே இறுதிப் பட்டியல் தயாரிக்கப்பட்டதாகவும் கூறியுள்ள ஆஷ்லி டி சில்வா அடுத்த கட்ட சந்திப்பிற்காக சிலர் நேரடியாக அழைக்கப்பட்டுள்ளதாகவும் இந்த வார இறுதிக்குள் சகல நடவடிக்கைகளும் நிறைவுக்கு வரும் எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .