A.P.Mathan / 2014 செப்டெம்பர் 16 , மு.ப. 07:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர் கீத்ருவான் விதானகே இலங்கை, பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான காலி டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாளின் இரவு முழுமையாக தங்குமிடத்தை விட்டு அனுமதி இன்றி வெளியே சென்ற குற்றம், நேற்று நடைபெற்ற ஒழுக்காற்று குழுவின் விசாரணையின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்க்கு தண்டனையாக குறித்த போட்டியின் ஊதியம் முழுவதும் தண்டமாக அறவிடப்பட்டுள்ள அதேவேளை, கடுமையாக அவர் எச்ச்சரிக்கப்பட்டு ஒரு வருட கண்காணிப்புக் காலம் வழங்கப்பட்டுள்ளது. இந்தக் காலத்தில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டால் இவர் கடுமையாக தண்டிக்கப்பட வாய்ப்புகள் உள்ளன. அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .