2026 ஏப்ரல் 08, புதன்கிழமை

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் சீனா முழுமை ஆதிக்கம்

A.P.Mathan   / 2014 செப்டெம்பர் 24 , மு.ப. 02:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் ஐந்தாம் நாளான நேற்று (23), சீனா முழுமை ஆதிக்கத்துடன் முதலிடத்தைக் தக்க வைத்துள்ளது. மற்றைய நாடுகள் நெருங்க முடியாத அளவில் அதிக பதக்கங்களை வென்றுள்ளது. போட்டிகளை நடாத்தும் தென் கொரியாவானது சீனாவிற்கு போட்டியாக இருந்த போதும் இப்போது சீனாவிற்கு யாரும் போட்டி இல்லை என்ற நிலை உருவாகியுள்ளது.   
 
சீனா 40 தங்கப்பதக்கங்கள் அடங்கலாக 82 பதக்கங்களை பெற்றுள்ளது. 22 வெள்ளிப் பதக்கங்களையும் 20 வெண்கலப் பதக்கங்களையும் சீனா வெற்றி பெற்றுள்ளது. தென்  கொரியா 19 தங்கம், 19 வெள்ளி, 21 வெண்கலம் அடங்கலாக 59 பதக்கங்களைப் பெற்றுள்ளது. 60 பதக்கங்களைப் பெற்று ஜப்பான் மூன்றாமிடத்தைப் பெற்றுள்ளது. 16 தங்கம், 22 வெள்ளி, 22 வெண்கலம் அடங்கலாக  ஜப்பான் இந்தப் பதக்கங்களைப் பெற்றுள்ளது. கசகஸ்தான் 4 தங்கப்பதக்கங்கள் அடங்கலாக  18 பதக்கங்களுடன்  நான்கமிடத்தையும், வட கொரியா 3 தங்கப் பதக்கங்கள்  அடங்கலாக 14 பதக்கங்களுடன் ஐந்தாமிடத்தையும் பெற்றுள்ளன. தொடர்ந்து வரும் இடங்களை மொங்கோலியா, மலேசியா,சைனிஸ் தாய்பேய்,மியன்மார், வியட்நாம்  ஆகிய நாடுகள் பெற்றுள்ளன.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .