2026 ஏப்ரல் 08, புதன்கிழமை

சம்பியன் லீக் தொடரில் ஹோபர்ட் கியுரிகன்ஸ் வெற்றி

A.P.Mathan   / 2014 செப்டெம்பர் 24 , மு.ப. 02:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

சம்பியன்ஸ் லீக் கிரிக்கெட் தொடரில் ஹோபர்ட் கியுரிகன்ஸ், நோதேர்ன் நைட்ஸ் அணிகளுக்கிடையிலான போட்டியில் ஹோபர்ட் கியுரிகன்ஸ் அணி 86 ஓட்டங்களினால் வெற்றி பெற்றது. 
 
இந்தப் போட்டியில் முதலில் துடுப்பாடிய ஹோபர்ட் கியுரிகன்ஸ் அணி 20 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்து 178 ஓட்டங்களைப் பெற்றது. இதில் ஏடியன் பிலிசார்ட் 62 ஓட்டங்களையும், சொஹைப் மலிக் ஆட்டமிழக்காமல் 45 ஓட்டங்களையும், ரிம் பெயின் 43 ஓட்டங்களையும் பெற்றனர். பதிலுக்கு துடுப்பாடிய நோதேர்ன் நைட்ஸ்  அணி 16.4 ஓவர்களில் சகல  விக்கெட்களையும்  இழந்து 92 ஓட்டங்களைப் பெற்றது.  இதில் ஸ்கொட் ஸ்டைரிஸ்  37 ஓட்டங்களை பெற்றார். பந்துவீச்சில்  பென் ஹில்பன்கொஸ்  3 விக்கெட்களையும், டக் போலின்ஜர் 3  விக்கெட்களையும் கைப்பற்றினர். போட்டியின் நாயகனாகபென் ஹில்பன்கொஸ் தெரிவு செய்யப்பட்டார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .