2026 ஏப்ரல் 08, புதன்கிழமை

பாகிஸ்தான் முக்கிய வீரர்களுக்கு அபராதம்

A.P.Mathan   / 2014 செப்டெம்பர் 24 , மு.ப. 02:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

தங்கள் உடற்தகுதியை பாதுகாக்க தவறிய நான்கு பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் வீரர்களுக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் சபை அபராதம் விதித்துள்ளது. சஹிட் அப்ரிடி, உமர் அக்மல், அப்துர் ரெஹ்மான், ரஸா ஹசன் ஆகிய வீரர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஓகஸ்ட் மாதத்தில் இருந்து நான்கு மாதங்கள் பாகிஸ்தான் கிரிக்கெட் சபையினால் வழங்கப்படும் ஊதியத்தில் 25% தண்டமாக அறவிடப்பட்டுள்ளது. 
 
பாகிஸ்தானின் ஒப்பந்தத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள 29 பேரும் சோதனைகளில் ஈடுபட வேண்டும் என அறிவிக்கப்பட்டு இருந்த போதும் 26 பேர் சோதனைகளில் ஈடுபட்டனர். அவர்களில் 16 பேர் சித்தியெய்தியுள்ளனர். இவர்களில் ஷான் மசூட், உமர் அமின் ஆகியோர் உயரிய சித்திகளைப் பெற்றுள்ளனர். அவர்கள் இருவருக்கும் ஓகஸ்ட் மாதத்தில் இருந்து நான்கு மாதங்கள் பாகிஸ்தான் கிரிக்கெட் சபையினால் வழங்கப்படும் ஊதியத்தில் 17.5% மேலதிகக் கொடுப்பனவாக வழங்கப்படவுள்ளது. மிஸ்பா உல் ஹக், அஹமட் செஷாட், பிலவால் பாட்டி ஆகியோர் 10% மேலதிக கொடுப்பனவுகள் வழங்கப்பட்டுள்ளன. 
 
நசீர் ஜெம்ஷெட், வஹாப் ரியாஸ், சைட் அஜ்மல் ஆகியோர் சோதனைகளில் ஈடுபடவில்லை. பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் தங்கள் உடற்தகுதிகளை பேணுவதில்லை என சந்தேகம் இருந்த நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் சபை குறித்த உடற் தகுதி சம்மந்தப்பட்ட ஒப்பந்தம் ஒன்றை வீரர்களுக்கான ஒப்பந்தத்தில் உள்ளடக்கியுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .