2026 ஏப்ரல் 08, புதன்கிழமை

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் சீனா, பதக்கங்களில் சதம்

A.P.Mathan   / 2014 செப்டெம்பர் 26 , மு.ப. 01:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் ஆறாம் நாளான நேற்றைய நாள் நிறைவில் சீனா 150 பதக்கங்களை தாண்டி தொடர்ந்தும் முதலிடத்திலுள்ளது. மூன்றாமிடத்தில் இருந்த ஜப்பான் அணி இரண்டாமிடத்திற்கு முன்னேறியுள்ளது. இரண்டாமிடத்தில் இருந்த போட்டிகளை நடாத்தும் தென் கொரியா மூன்றாமிடத்திற்கு பின் தள்ளப்பட்டுள்ளது.
 
சீனா 79 தங்கப்பதக்கங்களுடன் முதலிடத்தைப் பெற்றுள்ளது. 42 வெள்ளிப் பதக்கங்களையும் 34 வெண்கலப் பதக்கங்களையும் பெற்று. மொத்தம்க 155 பதக்கங்களைப் பெற்றுள்ளது. ஜப்பான்  28 தங்கம், 36 வெள்ளி, 32 வெண்கலம் அடங்கலாக 96 பதக்கங்களைப் பெற்றுள்ளது. 92 பதக்கங்களைப் பெற்று தென் கொரியா  மூன்றாமிடத்தைப் பெற்றுள்ளது. 28 தங்கம், 33 வெள்ளி, 31 வெண்கலம் அடங்கலாக  தென் கொரியா இந்தப் பதக்கங்களைப் பெற்றுள்ளது. கசகஸ்தான்   6 தங்கப்பதக்கங்கள் அடங்கலாக  30 பதக்கங்களுடன்  நான்கமிடத்தையும், வட கொரியா 6 தங்கப் பதக்கங்கள்  அடங்கலாக 22 பதக்கங்களுடன் ஐந்தாமிடத்தையும் பெற்றுள்ளன. தொடர்ந்து வரும் இடங்களை சைனிஸ் தாய்பேய், ஈரான், ஹொங் ஹோங், மலேசியா மொங்கோலியா  ஆகிய நாடுகள் பெற்றுள்ளன.
 
இந்தியா 1 தங்கம், 1 வெள்ளி, 13 வெண்கலம் அடங்கலாக 15 பதக்கங்களைப் பெற்று பதினைந்தாம் இடத்தைப் பெற்றுள்ளது. இலங்கை இதுவரை பதக்கங்கள் எதனையும் பெறவில்லை.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .