2026 ஏப்ரல் 08, புதன்கிழமை

இந்திய கிரிக்கெட் அணியின் பணிப்பாளர் பதவியில் ரவி சாஸ்திரி தொடர்வார்

A.P.Mathan   / 2014 செப்டெம்பர் 26 , பி.ப. 06:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்திய கிரிக்கெட் அணியின் பணிப்பாளர் பதவியில் ரவி சாஸ்திரி, உலகக்கிண்ணம் வரை தொடர்வார் என இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை அறிவித்துள்ளது. இன்று(26) நடைபெற்ற செயற்குழு கூட்டத்திலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதேவேளை அணியின் பயிற்றுவிப்பாளராக டங்கன் பிலட்சர் தொடர்வார் எனவும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து தொடரின் நடுவில் உப பயிற்றுவிப்பாளர்களாக நியமிக்கப்பட்ட சஞ்சய் பங்கர், ஸ்ரீதர், அருண் ஆகியோரும் குறித்த பதவிகளில் தொடர்வார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
இங்கிலாந்து தொடரின் இடை நடுவே பந்துவீச்சு மற்றும் களத்தடுப்பு பயிற்றுவிப்பாளர் பதவிகளில் இருந்து விடுமுறை எனக் கூறி நீக்கப்பட ஜோ டோவ்ஸ், ற்றெவர் பெய்னி ஆகியோர் தொடர்பில் எந்த முடிவுகளும் தெரிவிக்கப்படவில்லை. அடுத்த வருடம் மார்ச் மாதம் வரை அவர்கள் ஒப்பந்தம் உள்ளமையினால் அவர்களுக்கான ஊதியம் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 
 
கிரிக் இன்போ இணையத்தளம், குறித்த இருவரும் தேசிய கிரிக்கெட் அக்கடமியில் கடமையாற்றுவார்கள் என இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாடு சபை தெரிவித்துள்ளது என செய்தி வெளியிட்டு இருந்த போதும், பின்னர் குறித்த செய்தில் மாற்றங்களை செய்து இருந்தது. இவர்கள் இருவரினது பதவிகளின் இறுதி முடிவு எடுக்க முன்னர் இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாடு சபை செயலாளர் சிவ்லால் யாதவ் இருவருடன் பேசிய பின்னரே எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .