2026 ஏப்ரல் 08, புதன்கிழமை

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்க சதம் பெற்றது சீனா

A.P.Mathan   / 2014 செப்டெம்பர் 29 , பி.ப. 01:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் பத்தாம் நாளான இன்று, சீனா தங்க பதக்கங்களில் சதத்தையும், மொத்த பதக்கங்களில் இரட்டைச் சதத்தையும் பெற்றுள்ளது. 22 பதக்கங்களை பெற்று  தொடர்ந்தும் சீனா முதலிடத்திலுள்ளது. இரண்டாம், மூன்றாமிடங்களை போட்டிகளை நடாத்தும் தென் கொரியா, ஜப்பான்  ஆகிய நாடுகள் பெற்றுள்ளன. பதினோரமிடத்தித்தில் இருந்த இந்தியா மேலும் ஒரு தங்கப் பதக்கத்தை பெற்று ஒன்பதாமிடத்திற்கு  முன்னோக்கி வந்துள்ளது. இலங்கைக்கு ஒரு வெண்கலப் பதக்கம் மாத்திரம் மகளிர் கிரிக்கெட் போட்டிகளில் கிடைத்துள்ளது.  
 
சீனா  107 தங்கப்பதக்கங்களுடன் முதலிடத்தைப் பெற்றுள்ளது. 65 வெள்ளிப் பதக்கங்களையும் 50 வெண்கலப் பதக்கங்களையும் பெற்று, மொத்தம்க 222 பதக்கங்களைப் பெற்றுள்ளது. தென் கொரியா  42 தங்கம், 49 வெள்ளி, 48 வெண்கலம் அடங்கலாக 139 பதக்கங்களைப் பெற்றுள்ளது. 34 தங்கம், 46 வெள்ளி, 46 வெண்கலம் அடங்கலாக 126 பதக்கங்களை பெற்று ஜப்பான் மூன்றமிடத்தை பெற்றுள்ளது. 
 
கசகஸ்தான் 12 தங்கப்பதக்கங்கள், 13 வெள்ளிப்பதக்கங்கள், 22 வெண்கலப்பதக்கங்கள்  அடங்கலாக  47 பதக்கங்களுடன்  நான்கமிடத்தையும், 8 தங்கப்பதக்கங்கள், 8 வெள்ளிப்பதக்கங்கள், 9 வெண்கலப்பதக்கங்கள்  அடங்கலாக  25 பதக்கங்களுடன் ஐந்தாமிடத்தையும் பெற்றுள்ளன. தொடர்ந்து வரும் இடங்களை ஈரான், சைனிஸ் தாய்பேய், கட்டார்,இந்தியா, ஹொங் கோங்   ஆகிய நாடுகள் பெற்றுள்ளன.
 
இந்தியா 4 தங்கம், 5 வெள்ளி, 26 வெண்கலம் அடங்கலாக 35 பதக்கங்களைப் பெற்றுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .