2026 ஏப்ரல் 07, செவ்வாய்க்கிழமை

முதலாவது தங்கத்தை வென்ற இலங்கை

Kanagaraj   / 2014 ஒக்டோபர் 03 , மு.ப. 07:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

17ஆவது ஆசிய விளையாட்டு போட்டியில் ஆண்களுக்கான இருபதுக்கு- 20 கிரிக்கெட் போட்டியின் இறுதிப் போட்டியில் இலங்கை அணி 68 ஓட்டங்களால் வெற்றியீட்டி, முதலாவது தங்கப்பதக்கத்தை பெற்றுகொண்டுள்ளது.

நாணய சுழற்சியில் வெற்றியீட்டிய இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடியது. 19.1 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 133 ஓட்டங்களை பெற்றது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி, சகல விக்கெட்டுகளையும் இழந்து 65 ஓட்டங்களை பெற்றது.

இலங்கை அணி சார்பாக லஹிரு திரிமான்னே அதிக பட்ச ஓட்டங்களாக 57 ஓட்டங்களை பெற்றுள்ளார்.

பந்து வீச்சில் ஆப்கானிஸ்தான் அணிசார்பாக முஹம்மத் நபி 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .