2026 ஏப்ரல் 07, செவ்வாய்க்கிழமை

இந்திய கால்பந்தாட்டத்தில் டோனி

A.P.Mathan   / 2014 ஒக்டோபர் 06 , பி.ப. 02:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவில் நடைபெறவுள்ள இந்தியன் சுப்பர் லீக் கால்பந்தாட்ட தொடரில் பங்கு பற்றும் சென்னையை பிரதிநிதிப்படுத்தும் சென்னையின் புட்போல் கிளப் அணியின் துணை உரிமையாளராக இந்திய கிரிக்கெட் அணித்தலைவர் டோனி இணைந்துள்ளார். இந்திய சினிமா நட்சத்திரமான அபிசேக் பட்சனுடனே தொனி இணைந்துள்ளார். இம்மாதம் 12ஆம் திகதி இந்த தொடர் ஆரம்பித்து டிசெம்பர் 20ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. 
 
ஏற்கெனவே இந்திய கிரிக்கெட் நட்சத்திரங்கள் சில இவ்வாறு அணிகளின் இணை உரிமையை வாங்கியுள்ளார். அதன்படி சச்சின் டெண்டுல்கர் கேரளா அணியில் இணை உரிமையைக் கொண்டுளா அதேவேளை சௌரவ் கங்குலி கொல்கொத்தா அணியிலும், விரதா கோலி கோவா அணியிலும் இணை உரிமைகளை கொண்டுளா நிலையில் இந்தப் பட்டியலில் டோனியும் இப்போது இணைந்துள்ளார்.  
 
இந்த தொடரில் பிரேசில் நாட்டின் ரொனால்டினோ உட்பட பல சர்வதேசக் கால்பந்தாட்ட நட்சத்திரங்கள் விளையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .