2026 ஏப்ரல் 07, செவ்வாய்க்கிழமை

இறுதி போட்டியில் இலங்கை வெல்லுமா?

George   / 2014 நவம்பர் 15 , மு.ப. 06:57 - 0     - {{hitsCtrl.values.hits}}


இந்தியா - இலங்கை கிரிக்கெட் அணிகள் மோதும் 5ஆவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி ராஞ்சியில் நாளை ஞாயிற்றுக்கிழமை(16) நடைபெறவுள்ளது.

இதுவரை நடந்த 4 போட்டிகளிலும்; இந்திய அணி வெற்றி பெற்று 4–0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கின்றது.

கட்டாக்கில் நடைபெற்ற முதல் போட்டியில் 169 ஓட்டங்கள் வித்தியாசத்திலும், அகமதாபாத்தில் நடைபெற்ற 2ஆவது போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்திலும், ஐதராபாத்தில் நடைபெற்ற 3ஆவது போட்டியில் 6 விக்கெட்டிலும், கொல்கத்தாவில் நடைபெற்ற 4ஆவது போட்டியில் 153 ஓட்டங்கள் வித்தியாசத்திலும் இந்திய அணி வெற்றி பெற்றது.

நாளை நடைபெறும் இறுதிப் போட்டியில் இந்தியா வெற்றி பெற்று இலங்கையை தோல்வியடைய செய்யுமா? அல்லது இந்த போட்டியிலாவது இலங்கை வெற்றிபெறுமா என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.

கடந்த போட்டியில் ரோகித்சர்மா 264 ஓட்டங்கள் குவித்து புதிய உலக சாதனை படைத்தார். நாளைய போட்டியிலும் வீரர்கள் புதிய சாதனை படைப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு காணப்படுகிறது.

சொந்த மண்ணில் இந்திய துடுப்பாட்டவீரர்கள் இலங்கையின் பந்துவீச்சை தொடர்ந்து துவம்சம் செய்து வருகிறார்கள்.

பந்துவீச்சு மற்றும் துடுப்பாட்டத்தில் சம பலத்துடன் காணப்படும் இந்திய அணி, நாளையும் தனது அதிரடியை வெளிப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இரு அணிகளும் நாளை மோதுவது 149ஆவது போட்டியாகும்;. இதுவரை நடந்த 148 போட்டிகளில் இந்தியா 82 போட்டிகளிலும் இலங்கை 54 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. ஒரு போட்டி சமனிலையில் முடிந்துள்ளதுடன் 11 போட்டிகளுக்க முடிவு இல்லை.

அணி வீரர்கள் விபரம்,

இலங்கை அணி

மெத்தியுஸ் (அணித்தலைவர்), தில்சான், சந்திமால், ஜெயவர்தன, திரிமானே, திசர பெரேரா, குலசேகர, மென்டிஸ், குசல பெரேரா, பிரசன்னா, பிரியஞ்சன், கமகே, ஹெரங்க, சத்துரங்க டி சில்வா, நிரோஷன்.

இந்திய அணி

வீராத் கோலி (அணித்தலைவர்), ரோகித்சர்மா, ரகானே, அம்பதி ராய்டு, ரெய்னா, ரொபின் உத்தப்பா, அஸ்வின், அக்ஷர் பட்டேல், ஸ்டூவர்ட் பின்னி, குல்கர்னி, உமேஷ் யாதவ், வினய்குமார், கரண்சர்மா, கேதர் யாதவ்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .