2026 ஏப்ரல் 07, செவ்வாய்க்கிழமை

தென்ஆபிரிக்காவுக்கு வெற்றி

A.P.Mathan   / 2014 நவம்பர் 16 , பி.ப. 12:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

அவுஸ்திரேலியா, தென் ஆபிரிக்கா அணிகளுக்கிடையில் அவுஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் 5 போட்டிகள் அடங்கிய தொடரின் இரண்டாவது போட்டியில் தென் ஆபிரிக்கா அணி வெற்றி பெற்று தொடரை 1இற்கு 1 என சமன் செய்துள்ளது. பேர்த்தில் நடைபெற்ற போட்டியில் தென் ஆபிரிக்கா அணி 3 விக்கெட்களினால் வெற்றி பெற்றது. 
 
இந்தப் போட்டியில் முதலில் துடுப்பாடியா அவுஸ்திரேலியா அணி, 41.4 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 154 ஓட்டங்களைப் பெற்றது. இதில் மிச்சல் மார்ஷ் 67 ஓட்டங்களையும், ஜோர்ஜ் பெய்லீ 27 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் மோர்னி மோர்க்கல் அவரின் சிறந்த பந்துவீச்சு பெறிதியாக 21 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்களைக் கைப்பற்றினார். டேல் ஸ்டைன் 3 விக்கெட்களைக் கைப்பற்றிக்கொண்டார். பதிலுக்கு துடுப்பாடிய தென் ஆபிரிக்கா  அணி 27.4 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 157 ஓட்டங்களைப் பெற்றது. 
 
இதில் ஏபி.டி.வில்லியர்ஸ் 48 ஓட்டங்களையும், ரிலி ரொசோவ் 30 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் ஜோஸ் ஹஸல்வூட் 5 விக்கெட்களைக் கைப்பற்றினார். போட்டியின் நாயகனாக மோர்னி மோர்க்கல் தெரிவு செய்யப்பட்டார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .