2026 ஏப்ரல் 07, செவ்வாய்க்கிழமை

விதிமுறைகளை மீறி பந்து வீசுவதாக மேலும் இருவர் மீது முறையீடு

A.P.Mathan   / 2014 டிசெம்பர் 03 , பி.ப. 08:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய அரபு ராஜ்ஜியத்தின் கிரிக்கெட் வீரர்கள் இருவர் பந்தை வீசி எறிவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தான், ஐக்கிய அரபு ராஜ்ஜிய அணிகளுக்கிடையில் நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் சர்வதேசப் போட்டியின் நடுவர்கள் மித வேகப் பந்து வீச்சாளர் மொஹமட் சஷாட், சுழல்ப் பந்துவீச்சாளர் சல்மான் பாரூக் ஆகியோர் மீது சந்தேகம் இருப்பதாக முறையீடு செய்துள்ளனர். 
 
குறித்த இரு பந்துவீச்சாளர்களும் சர்வதேசக் கிரிக்கெட் பேரவையின் விதிமுறைகளின் படி 21 நாட்களுக்குள் பரிசோதனை செய்து முடிவைப் பெறவேண்டும். விதிமுறைகளுக்கு உட்பட்டு பந்துவீச்சு இருப்பின் அவர்கள் தொடர்ந்து பந்டு வீச முடியும். இல்லாவிடின் அவர்கள் பந்துவீச முடியாமல் தடை செய்யப்படுவார்கள்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .