2026 ஏப்ரல் 08, புதன்கிழமை

ஒலிம்பிக் போட்டிகள் நடக்கவிருக்கும் கடலில் சூப்பர் பக்டீரியா

Kogilavani   / 2014 டிசெம்பர் 16 , மு.ப. 11:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரேசிலில், எதிர்வரும் 2016 ஆண்;டு நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளின்போது படகு ஓட்ட போட்டிகள் நடக்கவிருக்கும் கடற்பகுதியில் மருந்துகளுக்கு கட்டுப்படாத பக்டீரியா இருப்பதாக அந்நாட்டு விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

பிரேசிலில், ரியோ டி ஜெனிரோ 2016 ஒலிம்பிக் போட்டிகளின் போது படகு ஓட்ட போட்டிகள் நடக்கவிருக்கும் கடற்பகுதியில் மருந்துகளுக்கு கட்டுப்படாத பக்டீரியா இருப்பதாக அந்த நாட்டு விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

பொதுவாக மருத்துவமனைக் கழிவுகளில் காணப்படும் இந்த சூப்பர் பக்டீரியாக் கிருமி, சிறுநீரக மற்றும் வயிற்றுப் போக்கு நோய்களை உண்டாக்குவதாகும்.

குவானபாரா குடாவில் கலக்கும் ஆறு ஒன்றில் இருந்து எடுக்கப்பட்ட மாதிரியில் இருந்து இது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த பக்டீரியாக்கள் எவருக்கும் தொற்றினால் அவர்களுக்கு உடனடியாக மருத்துவமனை சிகிச்சை அவசியம் என்று கூறியுள்ள ஆய்வாளர்கள், ஆனால் இதுவரை எவருக்கும் அவை தொற்றியதாக தகவல் இல்லை என்றும் கூறியுள்ளனர்.

ரியோ நகரின் சுத்திகரிக்கப்படாத கழிவுகளில் 70 வீதமானவை இந்தக் கடலில்தான் கலக்கின்றன


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .