2026 ஏப்ரல் 06, திங்கட்கிழமை

அமெரிக்க கண்டத்தின் சிறந்த வீரராக ரொட்ரிகஸ்

A.P.Mathan   / 2014 டிசெம்பர் 27 , மு.ப. 09:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமெரிக்க கண்டத்தின், 2014ஆம் ஆண்டிற்கான சிறந்த விளையாட்டு வீரராக கொலம்பிய நாட்டின் வீரர் ஜேம்ஸ் ரொட்ரிகஸ் தெரிவு செய்யப்பட்டுள்ளார். அனைத்து வித விளையாடுக்களிலும் இவர் சிறந்த வீரராக தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

இந்த வருட உலகக்கிண்ண தொடரில் கூடுதலான கோல்களை அடித்து தங்க பாதணி விருதை வென்றவர் ஜேம்ஸ் ரொட்ரிகஸ். உலகக்கிண்ண பெறுதியை தொடர்ந்து இவர் ஸ்பெயினின் முன்னணிக் கழகமும் உலகின் பணக்கார கழகமும் என போற்றப்படும் ரியல் மாட்ரிட் கழகத்தில் இணைக்கப்பட்டு, அந்த அணியின் முன்னணி வீரர்களில் ஒருவராக திகழ்கின்றார்.   

இதேவேளை சிறந்த அணியாக ஆர்ஜன்டீனா காற்ப்பந்தாட்ட அணி தெரிவு செய்யப்பட்டுள்ளது. உலகக்கிண்ண தொடரில் ஆர்ஜன்டீனா அணி இரண்டாமிடத்தை பெற்றுக் கொண்டது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .