2026 ஏப்ரல் 08, புதன்கிழமை

சங்காவின் சாதனையை முறியடித்தார் டோனி

A.P.Mathan   / 2014 டிசெம்பர் 27 , பி.ப. 02:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் மகேந்திர சிங் டோனி, சர்வதேசக் கிரிக்கெட் போட்டிகளில் கூடுதலான ஸ்டம்ப் முறையிலான ஆட்டமிழப்புக்களை செய்தவர் என்ற சாதனையை இன்று முறியடித்தார். அவுஸ்திரேலியா வீரர் மிச்சல் ஜோன்சனை ஆட்டமிழக்க செய்ததன் மூலம் இலங்கை அணியின் குமார் சங்ககாராவுக்கு சொந்தமாக இருந்த இந்த சாதனையை தனதாக்கினார். 460  இன்னிங்சில் 134 ஸ்டம்புகளை செய்துள்ளார் டோனி. 485 இன்னிங்சில் 133 ஸ்டம்புகளை செய்துள்ளார் குமார் சங்ககார. இந்த பட்டியலில் மூன்றாமிடத்தில் உள்ளவர் இலங்கை அணியின் ரொமேஷ் களுவிதாரண. 

சகலவித கிரிக்கெட் போட்டிகளிலும் இலங்கை அணியின் குமார் சங்கார 724 ஆட்டமிழப்புக்களை செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது. டோனி 638 ஆட்டமிழப்புக்களை செய்துள்ளார். 999 ஆட்டமிழப்புக்களை செய்து தென் ஆபிரிக்கா அணியின் மார்க் பௌச்சர் சாதனையை தன் வசம் வைத்துள்ளார். அடம் கில்கிறிஸ்ட் 905 ஆட்டமிழப்புக்களை செய்துள்ளார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .