2026 ஏப்ரல் 08, புதன்கிழமை

அவுஸ்திரேலியா முன்னிலை

George   / 2014 டிசெம்பர் 29 , மு.ப. 11:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியா–அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையில் மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற்றுவரும் 3ஆவது டெஸ்ட் போட்டியில் 326 ஓட்டங்களால் அவுஸ்திரேலியா முன்னிலையில் உள்ளது.

தனது முதல் இன்னிங்சில் 530 ஓட்டங்களை  அவுஸ்திரேலியா பெற்றுக்கொண்டதுடன் இந்தியா நேற்றைய 3ஆவது நாள் ஆட்ட நேர முடிவில் 8 விக்கெட்டுக்களை இழந்து 462 ஓட்டங்களை பெற்றிருந்தது.

2ஆவது இன்னிங்ஸூக்காக இன்று துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா இன்றைய ஆட்ட நேர முடியில் 7 விக்கெட் இழப்புக்கு 261 ஓட்டங்களை பெற்றிருந்தது.

அதன்படி இந்திய அணி 326 ஓட்டங்களால் பின்தங்கியுள்ளதுடன் போட்டியின் இறுதி நாளான நாளைய தினம் அவுஸ்திரேலிய அணி, போட்டியை வெற்றி கொள்ளும் முனைப்புடன் கடுமையாக விளையாடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .