2026 ஏப்ரல் 08, புதன்கிழமை

இந்திய உலகக்கிண்ண அணி

A.P.Mathan   / 2015 ஜனவரி 07 , மு.ப. 03:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

அவுஸ்திரேலியா, இந்தியா ஆகிய நாடுகளில் நடைபெறவுள்ள உலகக் கிண்ண கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்பார்க்கப்பட்ட அணியே அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
ஸ்டுவோர்ட் பின்னி மாத்திரமே 50 இற்கு 50 வாய்ப்பு உள்ளவராக கருதப்பட்டவர், அணிக்குள் இடம் பிடித்துள்ளார். அதேபோன்று அதிகமாக எதிர்பார்க்கப்பட்ட சுழல்ப் பந்துவீச்சாளர் அக்ஸார் பட்டேல் அணிக்குள் இடம் பிடித்துள்ளார். இவர் மாத்திரமே ஒரு புதிய வீரர். அண்மைக்காலமாக அணிக்குள் இடம்பிடித்து இருந்து மோஹித் ஷர்மா அணியில் இடம் பிடிக்கவில்லை. அதேவேளை ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் ஒதுக்கப்பட்டு வந்த இஷாந்த் ஷர்மா அண்மைக்காலமாக மீண்டும் ஒருநாள் அணியில் இடம் பிடித்தவர், உலகக்கிண்ண அணியில் இடம் பிடித்துள்ளார். உபாதை காரணமாக அவுஸ்திரேலியாவில் இருந்து நாடு திரும்பிய ரவீந்தர் ஜடேஜா சிறப்பாக குணமடைந்து வரும் நிலையில் அவரும் அணியில் இடம் பிடித்துள்ளார். 
 
இந்திய அணி விபரம் 
மகேந்திர சிங் டோனி, விராத் கோலி, சிகார் தவான், ரோஹித் ஷர்மா, அஜிங்கையா ரெஹானே, சுரேஷ் ரெய்னா, ரவீந்தர் ஜடேஜா, ரவிச்சந்திரன் அஷ்வின், புவனேஸ்வர் குமார், மொஹமட் ஷமி, உமேஷ் யாதவ், அக்ஸார் பட்டேல், இஷாந்த் ஷர்மா, அம்பாத்தி ராயுடு, ஸ்டுவோர்ட் பின்னி
 
இந்த அணித் தெரிவில் 30 பேர் கொண்ட குழுவில் இடம் பிடிக்காத யுவராஜ் சிங் மற்றும் பல முக்கிய வீரர்களின் பெயர் பரிசீலிக்கப்பட்ட போதும் 5 தெரிவுக்குழு உறுப்பினர்கள், அணித் தலைவர், பயிற்றுவிப்பாளர் ஆகியோரின் கலந்துரையாடலின் பின்னரே இந்த அணி தெரிவு செய்யப்பட்டது என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை செயலாளர் சஞ்சய் பட்டேல் தெரிவித்துள்ளார். 
 
கடந்த உலகக் கிண்ண தொடரில் இந்திய குழுவில் இடம் பிடித்த வீரர்களில் மகேந்திர சிங் டோனி, விராத் கோலி, சுரேஷ் ரெய்னா, ரவிச்சந்திரன் அஷ்வின் ஆகியோர் மாத்திரமே இம்முறை இடம் பிடித்துள்ளனர். மிகுதி 11 வீரர்களும் உலகக்கிண்ண அணியில் முதற் தடவையாக விளையாடுகின்றனர். இந்த 4 வீரர்களும் கடந்த உலகக் கிண்ண தொடரின் அநேக போட்டிகளில் விளையாடியவர்கள். அஷ்வின் இறுதிப் போட்டியில் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .