2026 ஏப்ரல் 08, புதன்கிழமை

உலகக்கிண்ண பாகிஸ்தான் அணி

A.P.Mathan   / 2015 ஜனவரி 07 , பி.ப. 05:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலகக்கிண்ண தொடரில் விளையாடவுள்ள பாகிஸ்தான் அணியை இன்று பாகிஸ்தான் கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது. 15 பேர் கொண்ட இந்த அணியில் 30 வயதான சொஹைல் கான் என்ற வேகப்பந்து வீச்சாளர், 4 வருடங்களின் பின்னர் இணைக்கப்பட்டுள்ளார். உள்ளூர் போட்டிகளில் 62 விக்கெட்களை கடந்த வருடத்தில் கைப்பற்றிய அதேவேளை, இறுதி இரண்டு போட்டிகளிலும் தலா 5 விக்கெட்களை கைப்பற்றியுள்ளார். 

மொஹமட் ஹபிஸின் பந்து வீச்சு தடை அணியின் சமநிலையில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த தொடரில் உபாதை காரணமாக அணியில் இருந்து நீக்கப்பட்ட துடுப்பாட்ட வீரர் சொய்ப் மக்சூட், வேகப்பந்து வீச்சாளர்களான ஜுனைட் கான், எஷான் ஆதில் ஆகியோர் அணியில் மீண்டும் இடம் பிடித்துள்ளனர். உமர் குல், உபாதை குணமடையாத நிலையில் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். 

ஓஃப் ஸ்பின் பந்துவீச்சாளர்கள் இல்லாமல் அணி தெரிவு செய்யப்பட்டுள்ளது. முழுமையாக கிரிக்கெட்டின் நுட்பத்தை வைத்து இந்த முடிவை எடுத்ததாக தெரிவுக் குழு தலைவர் மொய்ன் கான் கூறியுள்ளார். 1992ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவில் வைத்து பாகிஸ்தான் அணி உலகக்கிண்ணத்தை வென்றபோது, அணியில் ஓஃப் ஸ்பின் பந்து வீச்சாளர்கள் இருக்கவில்லை. அந்த ஆடுகளங்களில் லெக் ஸ்பின் பந்து வீச்சாளர்கள் சாதிப்பார்கள் என்பதே அதற்கு காரணமாகும்.  

அணி விபரம் 
மிஸ்பா உல் கக் (தலைவர்), அஹமட் செஷாட், மொஹமட் ஹபீஸ், சர்ப்ராஸ் அஹமட், யூனுஸ் கான், ஹரிஸ் சொஹைல், உமர் அக்மல், சொஹைப் மக்சூட், சஹிட் அப்ரிடி, யசிர் ஷா, மொஹமட் இர்பான், ஜுனைட் கான், எஹ்சன் ஆதில், சொஹைல் கான், வஹாப் ரியாஸ்

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .