2026 ஏப்ரல் 08, புதன்கிழமை

மிஸ்பா ஓய்வு

A.P.Mathan   / 2015 ஜனவரி 12 , மு.ப. 08:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைவர் மிஸ்பா உல் ஹக், உலகக் கிண்ண தொடர் நிறைவடைந்ததும் ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் இருந்தும், டுவென்டி டுவென்டி போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாகவும் அறிவித்துள்ளார். தான் ஓய்வு தொடர்பாக நீண்ட நாட்களாக யோசித்து வந்ததாகவும் இதுவே சரியான தருணம் என முடிவு எடுத்துள்ளதாகவும் மிஸ்பா உல் ஹக் தெரிவித்துள்ளார். 

அதேவேளை தான் டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்தும் விளையாடவுள்ளதாக மேலும் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் கிரிகெட் சபையின் தலைவர் சஹாரியார் கான் இதை உறுதி செய்துள்ளார். மிஸ்பா உல் ஹக்கின் சொந்த விருப்பம் இது. அதை நாங்கள் ஏற்றுக் கொள்கின்றோம். மிஸ்பா பாகிஸ்தான் அணிக்கு சிறந்த சேவைகளை வழங்கியுள்ளார். சூதாட்ட சிக்கல்களில் அணி சிக்குண்டு இருந்த நிலையில் அணியின் ஒரு முக்கியமானவராக செயற்பட்டு அணியை காப்பாற்றியவர் எனவும் அவர் மேலும் புகழாரம் சூட்டியுள்ளார். 

2002ஆம் ஆண்டு தனது அறிமுகத்தை மேற்கொண்ட மிஸ்பா உல் ஹக், 153 ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் விளையாடியுள்ளார். 4,669 ஓட்டங்களை 42.83 என்ற சராசரியில் பெற்றுள்ளார். 37 அரைச்சதங்களை பெற்றுள்ளார். சதம் அடிக்காமல் கூடுதலான போட்டிகள் விளையாடிவர் என்ற சாதனை இவர் வசம் உள்ளது. 2004ஆம் ஆண்டு அணியால் நீக்கப்பட்ட இவர், 3 வருடங்களில் மீள் வருகையை பெற்று மீண்டும் 2009ஆம் ஆண்டு அணியால் நீக்கப்பட்டார். 2011ஆம் ஆண்டு அணியில் தலைவராக பொறுப்பேற்ற இவர், கடந்த வருட இறுதியில் போர்ம் இழந்து ஓடங்களை பெற தடுமாறிய வேளையில் தன்னை, தானாகவே ஒருநாள் அணியால் நிறுத்தி, பின்னர் டெஸ்ட் போட்டிகளில் இழந்த போர்மை பெற்றுக் கொண்டார். 40 வயதை பூர்த்தி செய்துள்ள போதும் அண்மையில் பாகிஸ்தான் கிரிக்கெட் சபை நடாத்திய உடல் பரிசோதனையில் தரம் இரண்டில் சித்தி பெற்று மேலதிக கொடுப்பனவையும் பெற்றுக்கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .