2026 ஏப்ரல் 08, புதன்கிழமை

வருட இறுதியில் 2022 கால்பந்தாட்டம்?

A.P.Mathan   / 2015 ஜனவரி 26 , மு.ப. 03:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

2022ஆம் ஆண்டு கட்டாரில் நடைபெறவுள்ள கால்பந்தாட்ட உலகக்கிண்ண தொடர் நவம்பர் - டிசெம்பர் மாதங்களில் நடத்தப்படுவதே நல்லது என ஆசிய கால்பந்தாட்ட சம்மேளன தலைவர் செய்க் சல்மான் பின் இப்ராஹிம் அல் காலிபா தெரிவித்துள்ளார். 

அந்தக் காலப்பகுதி குளிர் காலமாக இருப்பதனால் அனைத்து நாட்டு வீரர்களும் அதனை விரும்புவார்கள். வெப்ப காலத்தில் போட்டிகளை நடாத்தினால் வீரர்கள் அசௌகரியங்களை எதிர்கொள்வார்கள். அதேவேளை 2022ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளும் நடைபெறவுள்ளமையினால் அந்த நிகழ்வுகள் நடைபெறும் காலப்பகுதி இல்லாமலும் இருக்க வேண்டும். எனவே இந்தக் காலப்பகுதியே பொருத்தமானது என கட்டார் கால்பந்தாட்ட சம்மேளன தலைவர் செய்க் சல்மான் பின் இப்ராஹிம் அல் காலிபா தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் ஐரோப்பிய போட்டிகளை கவனத்திற்கொண்டு வசந்தகாலத்தில் போட்டிகளை நடத்துவது பொருத்தம் என்ற கோரிக்கைகளும் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. பாரம்பரியமாக இந்த தொடர் நடாத்தப்படும் ஜூன் - ஜூலை காலப்பகுதியில் கட்டாரில் 50 பாகை செல்சியஸ் வெப்பம் இருக்கும் என்ற காரணத்தினாலேயே இந்த திட்டம் எடுக்கப்பட்டுள்ளது. 

குறித்த திட்டத்திற்காக சர்வதேசக் கால்பந்தாட்ட சம்மேளனம் ஓர் அமைப்பை உருவாக்கி இந்த விடயங்களை ஆராய்ந்து சரியான காலப்பகுதியை தெரிவு செய்யுமாறு கூறியுள்ளது. இந்த அமைப்புக்கு  செய்க் சல்மான் பின் இப்ராஹிம் அல் காலிபா தலைமை தாங்குகின்றார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .