A.P.Mathan / 2015 ஜனவரி 27 , மு.ப. 05:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
நியூசிலாந்தில் இலங்கை கிரிக்கெட் அணி விளையாடும் விதம் தனக்கு திருப்தியில்லை என இலங்கை கிரிக்கெட்டின் தெரிவுக்குழுத் தலைவர் சனத் ஜெயசூரிய தெரிவித்துள்ளார். நான்காவது போட்டியிலும் இலங்கை அணி தோல்வியடைந்துள்ள நிலையிலேயே இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.
உலகக்கிண்ண தொடருக்கு முன்னர் இலங்கை அணி விளையாடும் விதமும், உலகக்கிண்ணத்திற்கான தயார்படுத்தலும் போதுமானதாக இல்லை எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். இன்னும் சில விடயங்களில் அதிக கவனம் செலுத்த வேண்டும். முன்னேற்றம் தேவைப்படுகின்றது. ஒவ்வொரு நாளும் அந்த முன்னேற்றம் இருக்க வேண்டும். இந்த தொடரில் ஒரே நல்ல விடயம் உலகக்கிண்ண தொடரின் முதற் போட்டியில் விளையாடவுள்ள நியூசிலாந்து அணியுடன் இலங்கை அணி விளையாடுகின்றது. அத்துடன் உலகக்கிண்ணம் நடைபெறும் ஒரு நாடான நியூசிலாந்தில் 2 மாதங்கள் கிரிக்கெட் விளையாடுவது.
பந்துவீச்சு பிரச்சினையாக உள்ளது. அழுத்தத்தை எதிரணி உடைத்து ஓட்டங்களை பெற்றுக் கொள்கின்றது. பந்துவீச்சில் கவனம் செலுத்த வேண்டும். லசித் மாலிங்க இல்லாமை பின்னடைவே. நுவான் குலசேகர, சுரங்க லக்மால் ஆகியோர் உபாதையில் இருந்து மீண்டுள்ளனர். அவர்களின் பந்துவீச்சு நல்ல முறையில் உள்ளது எனவும் சனத் ஜெயசூரியா மேலும் தெரிவித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .