2026 ஏப்ரல் 07, செவ்வாய்க்கிழமை

ஆப்கானை வீழ்த்தி முதலாவது வெற்றியை ருசிபார்த்தது இலங்கை

George   / 2015 பெப்ரவரி 22 , மு.ப. 05:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

11ஆவது உலக கிண்ண கிரிக்கெட் போட்டிகளின் 12ஆவது போட்டியில் இலங்கை அணி, 4 விக்கெட்டுக்களால் ஆப்கானிஸ்தான் அணியை தோற்கடித்து தனது முதலாவது வெற்றியை பதிவு செய்துள்ளது.

 

டுனேடில் இன்று ஞாயிற்றுக்கிழமை(22) ஆரம்பமான 12ஆவது போட்டியில் இலங்கை – ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. 

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி, முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது. 

இதனையடுத்து, முதலில் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி, 49.4 ஒவரில், சகல விக்கெட்டுக்களையும் இழந்து 232 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. 

233 ஓட்டங்களை பெற்றால் வெற்றி என்ற இலக்கினை துரத்திய இலங்கை அணி, 48.1 ஓவர்களில் 236 ஓட்டங்களை பெற்று வெற்றியை தனதாக்கியது. 

இலங்கை அணி சார்பாக மஹேல ஜயவர்தன120 பந்துகளை எதிர்கொண்டு 8 நான்கு ஓட்டங்கள் மற்றும் ஒரு  6 ஓட்டம் அடங்கலாக 100 ஓட்டங்களை குவித்த நிலையில் ஆட்டமிழ்ந்தார்.

இன்றைய போட்டியுடன் இரண்டு போட்டிகளில் விளையாடியுள்ள இலங்கை ஒரு போட்டியில் தோல்வியும் ஒரு போட்டியில் வெற்றி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .