2026 ஏப்ரல் 08, புதன்கிழமை

பாகிஸ்தானை பந்தாடிய மே.இ.தீவுகள்

George   / 2015 பெப்ரவரி 21 , மு.ப. 11:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

11ஆவது உலக கிண்ண கிரிக்கெட் போட்டிகளின் 10ஆவது போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி 150 ஓட்டங்களால் பாகிஸ்தான் அணியை பந்தாடியது.

கிறிஸ்ட்சேர்ச்சில் இன்று சனிக்கிழமை(21) ஆரம்பமான 10ஆவது போட்டியில் மேற்கிந்திய தீவுகள்– பாகிஸ்தான் அணிகள் மோதின.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி, மேற்கிந்திய தீவுகளை முதலில் துடுப்பெடுத்தாட பணித்தது.

முதலில் களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள், 50 ஒவரில், 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 310 ஓட்டங்களை குவித்தது.

311 ஓட்டங்களை பெற்றால் வெற்றி என்ற இலக்கினை துரத்திய பாகிஸ்தான் அணி, 39 ஓவர்களில் 160 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்து தோல்வியை தழுவியது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .