2026 ஏப்ரல் 07, செவ்வாய்க்கிழமை

இந்தியாவுடனான தோல்வி எமது நம்பிக்கைக்கு வீழ்ந்த அடி

Kogilavani   / 2015 பெப்ரவரி 24 , மு.ப. 06:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவுக்கு எதிராக ஞாயிற்றுக்கிழமை(22) நடைபெற்ற போட்டியில் 130 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோற்றது அணியின் தன்னம்பிக்கை மீது வீழ்ந்த அடியாகும் என தென்னாபிரிக்க அணியின் தலைவர் ஏபி.டிவில்லியர்ஸ் கூறினார்.


இந்த போட்டியில் முதலில் ஆடிய இந்திய அணி, 50 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 307 ஓட்டங்களை எடுத்தது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாயெ தென்னாபிரிக்கா அணி 177 ஓட்டங்களுக்குச் சகல விக்கெட்களையும் இழந்தது.


இது குறித்து தென்னாபிரிக்க அணியின் தலைவர் மேலும் கூறியுள்ளதாவது,


'இந்தியாவுடானா போட்டியில், 130 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியுற்றது எங்களுக்கு ஒரு பெரிய அடிதான். இது சங்கடத்தை ஏற்படுத்திய தோல்வி. பெரிய ஓட்டங்கள் இடைவெளியில் தோற்பதை எந்த அணியும் விரும்பாது.


இந்த தோல்வியிலிருந்து நாங்கள் மீளெழ வேண்டும். காலிறுதிக்கு முன்னேறுவது தொடர்பில் சிந்திக்க வேண்டும். 2 ரன் அவுட்களால் எங்களுக்கு பின்னடைவு ஏற்பட்டது. இணைப்பாட்டம் ஒன்று ஏற்பட்டிருந்தால் வெற்றிக்கு அருகில் வந்திருப்போம்.


இந்திய ரசிகர்களின் ஆதரவு அந்த அணிக்கு நிறைய இருந்தது. இது ஓரளவுக்கு அனுகூலமாக அவர்களுக்கு இருக்கும். எங்களுக்கும் எங்கள் ரசிகர்களின் ஆதரவு இருந்தது.


விக்கெட்டுகளை வீழ்த்துவது கடினமாக இருந்தது. இந்த ஆடுகளத்;தில் 275 - 280 ஓட்டங்கள் எடுக்க முடியும் என்று நான் கருதினேன். இந்தியா 307 ஓட்டங்கள் எடுத்தது. நாங்கள் கட்டுப்படுத்தியும் இருந்தோம்.


ஆட்டத்தின் ஒருநேரத்தில் வெற்றி வாய்ப்பு இருந்ததாகவே நினைத்தோம். இரண்டு ரன் அவுட்களும் அவற்றை மாற்றி, ஏற்றுக்கொள்ளவே முடியாத அம்சமாக மாறிவிட்டது' என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .