2026 ஏப்ரல் 08, புதன்கிழமை

இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது அவுஸ்திரேலியா

George   / 2015 மார்ச் 26 , மு.ப. 11:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியின் இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணி போராடி தோற்றது.
இந்திய அணியின் தோல்வியையடுத்து அவுஸ்திரேலிய அணி இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளது.

இந்தியா –அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையிலான அரையிறுதிப் போட்டி, இன்று வியாழக்கிழமை(26) சிட்னியில் ஆரம்பமானது. நாணயசுழற்சியில் வெற்றிபெற்ற அவுஸ்திரேலிய அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. 

இதன்படி முதலில் ஆடிய அவுஸ்திரேலிய அணி 50 ஓவர்கள் நிறைவில்7 விக்கெட் இழப்புக்கு 328 ஓட்டங்களை பெற்றுள்ளது.  
329 ஓட்டங்களை பெற்றால் வெற்றி என்ற இலக்குடன் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி, முன்வரிசை துடுப்பாட்ட வீரர்களின் ஆட்டமிழப்புகளால் தோல்வியை தழுவியது.

46.5 ஓவர்கள் நிறைவில் இந்திய அணி, சகல விக்கெட்டுக்களையும் இழந்து 233 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது.

ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள உலக்கிண்ண இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணியுடன் அவுஸ்திரேலிய அணி மோதவுள்ளமை குறிப்பிடத்தக்கது


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .