2026 ஏப்ரல் 07, செவ்வாய்க்கிழமை

துணை அங்கத்துவ நாடுகள் ஒதுக்கப்படவில்லை: ஐ.சி.சி

Thipaan   / 2015 மார்ச் 30 , மு.ப. 07:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

2019ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உலகக்கிண்ண கிரிக்கெட் தொடருக்கான அணிகள் 10 ஆக குறைக்கப்படுவதனால் துணை அங்கத்துவ நாடுகள் தமக்கான வாய்ப்பை இழக்கும் என்ற விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டு வந்த நிலையில், சர்வதேசக் கிரிக்கெட் பேரவையின் தலைவர் ஸ்ரீநிவாசன் அதை மறுத்துள்ளார்.

துணை அங்கத்துவ நாடுகளுக்கு சிறப்பான வாய்ப்புகள் உள்ளன. தரப்படுத்தல்களில் முதல் 8 இடங்களை பிடிக்கும் நாடுகள் நேரடியாக உலகக் கிண்ண தொடருக்கு தகுதி பெறும்.

9ஆம், 10ஆம் இடங்களை பிடிக்கும் நாடுகள் துணை அங்கத்துவ நாடுகளுடன் தெரிவுப்போட்டிகளில் மோதி அவற்றில் இருந்து 2 அணிகள் தெரிவு செய்யப்படும்.

எனவே, திறமையான துணை அங்கத்துவ நாடுகள் உலகக்கிண்ண வாய்ப்பை பெற்றுக் கொள்ளும். தங்களுக்கான வாய்ப்புகள் இல்லாமல் போயுள்ளதாக அவர்கள் நினைக்கக்கூடாது என ஸ்ரீனிவாசன் தெரிவித்துள்ளார்.

சர்வதேச கிரிக்கெட் பேரவையின் கிரிக்கெட் குழு துணை அங்கத்துவ நாடுகளின் அபிவிருத்திக்கு 300 மில்லியன் அமெரிக்க டொலர்களை ஒதுக்கியுள்ளதாக தெரிவித்த ஸ்ரீனிவாசன், 8 வருட சுழற்சி முறையில் குறித்த நாடுகளின் கிரிக்கெட் வளர்ச்சிக்கு இந்த பணம் பயன்படுத்தப்படும் என கூறியுள்ளார்.

இதுபோன்ற நடைமுறை இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டதாகவும் அதன் மூலமே இந்திய அணி வளர்ச்சி அடைந்த சிறந்த அணியக திகழ்வதாகவும் துணை அங்கத்துவ நாடுகள் மத்தியில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த முறை அந்த நாடுகளின் வளர்ச்சிக்கு கை கொடுக்கும் எனவும் மேலும் ஸ்ரீனிவாசன் தெரிவித்துள்ளார்.

சர்வதேசக் கிரிக்கெட் பேரவையின் நிறைவேற்று அதிகாரி டேவிட் ரிச்சட்சன்,

டெஸ்ட் அணிகள் நேரடியாக உலகக்கிண்ணத்துக்கு தகுதி பெறமுடியும் என்ற நிலை இல்லை. அத்துடன் அயர்லாந்து, ஆப்கானிஸ்தான் அணிகள் சிறப்பாக செயற்பட்டு வருகின்றன. அவர்கள் முன்னணி அணிகளுடன் தொடர்ச்சியாக விளையாட வேண்டும்.

சர்வதேச கிரிக்கெட் பேரவையின் எதிர்கால கூட்டங்களில் பேசி இதற்கான தீர்வு பெறப்படும் எனக் கூறியுள்ளார். சிறந்த ஒரு நாள் அணிகளே உலகக்கிண்ணத்தில் விளையாட வேண்டும்.

அவை 8 ஆக, 10 ஆக, 12 ஆக இருக்கலாம். அதிக பணத்தை சாதாரண அணிகளுக்காக செலவழிக்காமல், அயர்லாந்து, ஆப்கானிஸ்தான் போன்ற பெரிய அணிகளுக்கு சவால் விடுக்கும் அணிகளுக்காக அவற்றை செலவழிக்க முடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .