A.P.Mathan / 2015 ஏப்ரல் 09 , மு.ப. 10:48 - 0 - {{hitsCtrl.values.hits}}

நேற்று கொல்கத்தா ஈடன்கார்டின் மைதானத்தில் இடம்பெற்ற 8வது பருவகால ஐபிஎல்லின் முதலாவது போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 7 விக்கெட்களால் 9 பந்து மீதமிருக்கையில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தியது.
ஆரம்பத்தில் நாணயசுழற்சியில் வெற்றி பெற்ற கொல்கத்தா அணியின் கப்டன் காம்பீர் மும்பை இந்தியன்ஸ் அணியை துடுப்பெடுத்தாட பணித்தார்.
அதன்படி மும்பை இந்தியன்ஸ் ஆரம்ப துடுப்பாட்டவீரர்களாக அணியின் கப்டன் ரோஹித் ஷர்மாவும், ஆரோன் பிஞ்சும் களமிறங்கினர். மோர்க்கலின் பந்துவீச்சுக்கு முகம் கொடுக்காமல் திணறிய மும்பை இந்தியன்ஸ் 37 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களை இழந்து தடுமாறியது.
பின்னர் களம்புகுந்த கொரி அண்டர்சன், ரோஹித் ஷர்மாவின் 131 ரன்கள் இணைப்பாட்டம் கைகொடுக்க 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்களை இழந்து 168 ஓட்டங்களை பெற்றது. ரோஹித் சர்மா ஆட்டமிழக்காமல் 65 பந்துகளில் 4 சிக்சர், 12 பவுண்டரிகள் உட்பட 98 ஓட்டங்களை பெற்றார். அண்டர்சன் 4 பவுண்டரிகள், 3 சிக்சர்கள் உட்பட 41 பந்துகளில் 55 ஓட்டங்களை பெற்றார். மோர்க்கல் 2 விக்கெட்டை கைப்பற்றினார்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கொல்கத்தா அணி காம்பீர் 43 பந்துகளில் 7 பவுண்டரிகள், 1 சிக்சர் உள்ளடங்கலாக பெற்ற 57 ஓட்டங்கள் கைகொடுக்க பின்னர் வந்த மனிஷ் பாண்டே 24 பந்துகளில் 2 பவுண்டரி, 3 சிக்சர் உள்ளடங்கலாக பெற்ற 40 ஓட்டங்கள், சூரியகுமார் யாதவ் 20 பந்துகளில் 5 சிக்சர், ஒரு பவுண்டரி உள்ளடங்கலாக பெற்ற 46 ஓட்டங்கள் அதிரடி கைகொடுக்க கடந்தமுறை சாம்பியனான கொல்கத்தா அணி வெற்றியுடன் இப்பருவகால ஐபிஎல்லை தொடக்கியுள்ளது.
இன்று இலங்கை நேரம் இரவு 8 மணிக்கு சென்னை சுப்பர் கிங்ஸ் அணிக்கும் டெல்லி டார்டெவில்ஸ் இடையே சென்னையில் போட்டி இடம்பெறவுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .