2026 ஏப்ரல் 08, புதன்கிழமை

போல் டவுன்டன் விலகுகின்றார்

A.P.Mathan   / 2015 ஏப்ரல் 09 , மு.ப. 11:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலகக்கிண்ணத்தில் இங்கிலாந்தின் மோசமான பெறுபேறுகள் காரணமாக இங்கிலாந்து கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் நிர்வாக இயக்குநர் பதவியிலிருந்து டவுன்டன் விலகுகின்றார்.

கடந்த 2014 பெப்ரவரி, ஹியூ மோரிஸ் பதவிவிலகிய பின் போல் டவுன்டன் பதவிக்கு வந்திருந்தார்.

முன்னாள் அணியின் கப்டனும், நட்சத்திரவீரருமான கெவின் பீற்றர்சனை ஆஷஸ் முடிவடைந்த பின் அணியிலிருந்து நீக்கியமை, ஒருநாள் அணியின் கப்டனான குக்கை உலகக்கிண்ண போட்டிகள் தொடங்க ஒருமாதமிருக்க நீக்கியமை போன்ற சர்ச்சைக்குரிய முடிவுகளை இவரே எடுத்திருந்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .