2026 ஏப்ரல் 08, புதன்கிழமை

தெ.ஆ அணியில் 4 கறுப்பின வீரர்கள் கட்டாயம்

Thipaan   / 2015 ஏப்ரல் 19 , பி.ப. 01:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

தென் ஆபிரிக்க கிரிக்கெட் அணியின் விளையாடும் 11 பேரில் குறைந்தது  நான்கு கறுப்பின வீரர்கள் அல்லது வெள்ளையினத்தை தவிர்ந்த, சிறுபான்மையினத்தை சேர்ந்தவர்கள் கட்டாயம் இருக்க வேண்டும் என கிரிக்கெட் தென் ஆபிரிக்கா அணி அறிவித்துள்ளது.

2007ஆம் ஆண்டு முதல் இந்த நடைமுறை இருந்து வருகின்ற போதும் தேவைக்கு ஏற்ப 3 வீரர்கள் தொடக்கம் 5 அல்லது 6 வீரர்கள் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.

உலகக் கிண்ண தொடரின் அரை இறுதிப் போட்டியில் வேர்ணன் பிலாண்டர், கைல் அப்போட்டுக்கு பதிலாக செர்{ஹக் கொள்ளப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.

இந்த நிலையில் அண்மையில் அணியின் ஊக்குவிப்பாளராக இருந்து அணியில் இருந்து விலகிய மைக் ஹோர்ன், பிலான்டரின் தெரிவில் அரசியல் இருப்பதாக கூறி இருந்தார்.

இதனைத் தொடர்ந்து கிரிக்கெட் தென் ஆபிரிக்காவின் தலைவர் அன்று ஹட்சன் இந்த விடயம் தொடர்பகா விசாரிக்க விசாரணைக்குழு ஒன்றை நியமித்தார்.

அந்தக் குழு குறித்த தெரிவு சரியாகவே நடைபெற்றுள்ளது எனவும் பிலாண்டர் முதற் தெரிவாக இருந்ததாகவும் அரசியல் பின்னணி அல்லது நிற அடிப்படையில் அவர் சேர்த்துக் கொள்ளபப்டவில்லை எனவும் கூறியுள்ளது.

இதனை தொடர்ந்து கிரிகெட் தென்ஆபிரிக்கா குறைந்தது ஒவ்வொரு போட்டியிலும் விளையாடும் 11 பேரில் 4 பேர் கருப்பு இனத்தை  அல்லது சிறுபான்மையினத்தை சேர்ந்தவர்கள் விளையாடவேண்டும் என அறிவித்துள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .