2026 ஏப்ரல் 08, புதன்கிழமை

மெல்பேர்ன் ஸ்டார்ஸ் தலைவராக கிளார்க்

Kogilavani   / 2015 ஏப்ரல் 19 , பி.ப. 02:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

அவுஸ்திரேலியா உள்ளூர் 20:20 போட்டிகளில் இதுவரை விளையாடாத அவுஸ்திரேலியா டெஸ்ட் அணித் தலைவர் மைக்கல் கிளார்க் முதற் தடவையாக பிக் பாஸ் லீக் போட்டித் தொடரில் பங்குபற்றவுள்ளார்.

இவர், தனது அறிமுகத்தை அணித் தலைவராகவே மேற்கொள்ளவுள்ளார் என்பது குறிப்பிடத்தகது. டெஸ்ட் மற்றும் ஒரு நாள் சர்வதேசப் போட்டிகளுக்கு முக்கியத்துவம் வழங்கி 20-20 போட்டிகளில் விளையாடுவதை தவிர்த்து வந்தார் கிளார்க்.

2012 ஆம் ஆண்டு ஐ.பி.ல் கிரிக்கெட் தொடரின் பின்னர் அவர் 20-20 போட்டிகளில் பங்குபற்றவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றதனை தொடர்ந்து கிளார்க் அவுஸ்திரேலியா பிக் பாஸ் போட்டித் தொடரில் பங்குபற்ற முடிவு செய்துள்ளார். இதனை தொடர்ந்து மெல்பேர்ன் ஸ்டார்ஸ் அணி முகாமைத்துவம் மைக்கல் கிளார்க்கை நேரடியாக தலைவராக அறிமுகம் செய்யும் முடிவை எடுத்துள்ளது. கடந்த வருட தொடரின் போது கமரூன் வைட் அணித் தலைவராக கடமையாற்றி இருந்தார்.

இதுவரை மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி பிக் பாஸ் லீக் தொடரில் இறுதிப் போட்டிக்குத் தெரிவாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .