2026 ஏப்ரல் 08, புதன்கிழமை

வாயை ஒட்டி விளையாடிய பொலார்ட்

Thipaan   / 2015 ஏப்ரல் 20 , மு.ப. 07:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வரும் மேற்கிந்திய தீவுகள் அணியின் வீரர்  கெரோன் பொலார்ட், பெங்களுர் ரோயல் சலஞ்செர்ஸ் அணியுடனான போட்டியின் களத்தடுப்பின் போது வாயை பிளாஸ்டறினால் ஒட்டி விளையாடினார்.  

தன்னுடைய சக நாட்டு வீரர் க்றிஸ் கெயிலுடன் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டதைத் தொடர்ந்து, நடுவர்களினால் அவர் எச்சரிக்கப்பட்டார்.

உடனடியாக அவர், வாயை பிலாஸ்டறினால் ஒட்டியபடி களத்தடுப்பில் ஈடுபட்டார். அதனைப் பார்த்த கெயில் சிரித்து விட்டு சென்றார்.

ரசிகர்களும், வீரர்களும் இந்த செயலை நகைச்சுவையாக ரசித்தனர்.  போட்டி நிறைவடைந்ததும் தான் அதை நகைச்சுவையாக   செய்ததாக பொலாட் கூறியுள்ளார்.

கிரிக்கெட்டில் இதுவரை யாரும் இவ்வாறு செய்ததில்லை. இதற்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை ஏதாவது நடவடிக்கை எடுக்குமா இல்லையா என்பது தெரியவில்லை.  

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .